24 மார்., 2010

மாவோயிஸ்டு தலைவர் கனு சன்யால் மரணம்

சிலுகுரி:இந்தியாவில் நக்ஸல்பாரி இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான கனு சன்யால் மேற்குவங்க மாநிலம் ஹதிகிஷா என்ற இடத்தில் தூக்கில் தொங்கியவாறு மரணித்துக் கிடந்தார்.

78 வயதான சன்யால் திருமணம் முடிக்காமல் நக்ஸல்பாரி இயக்கத்திற்காக பாடுபட்டவர். இவருடைய கடைசிக் காலக்கட்டத்தில் நக்ஸல்பாரிகளின் செயல்பாடுகளில் வெறுப்புற்று மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
1969 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டு லெனினிஸ்ட் கட்சி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். இவர் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். எளிமையான வாழ்க்கை மற்றும் தொண்டர்களுடனான நெருக்கத்தின் காரணமாக மேற்குவங்காள பத்திரிகைகள் காந்தியுடன் இவரை ஒப்பிட்டு புகழ்ந்தன.

புரட்சி நடவடிக்கைகளின் காரணமாக சன்யால் பலமுறை சிறைச் சென்றுள்ளார். சமீபத்திய சிங்கூர் ஆதிவாசிகள் நடத்திய பூமிமீட்பு போராட்டத்திலும் தலைமைத்துவ பங்களிப்பை அளித்திருந்தார். கனு சன்யாலின் மரணத்தின் மூலம் நக்ஸல் பாரி இயக்கத்தின் ஸ்தாபகரில் கடைசி நபரும் சென்றுவிட்டார். ஏற்கனவே சாரு மஜும்தார், ஜங்கல் சந்தான் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர்.

இந்தியாவில் ஆரம்ப காலத்தில் நடந்த நக்ஸல்பாரிகளின் போராட்டத்திற்க்கு சீன கம்யூனிஸ்டுகட்சியும், அந்நாட்டின் அரசும் ஆதரவுதெரிவித்தன. 'இந்தியாவின் கிழக்கு மாகாணத்தின் வசந்தத்தின் இடிமுழக்கம்' என கனுசன்யால் தலைமையிலான நக்ஸல்களின் போராட்டத்தை பீஜிங் ரேடியோ வர்ணித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாவோயிஸ்டு தலைவர் கனு சன்யால் மரணம்"

கருத்துரையிடுக