லண்டன்:துபாயில் ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கொல்லப்பட்டார்.
இக்கொலையில் 27 குற்றவாளிகளின் விபரங்களை துபாய் போலீஸ் புலனாய்வுச் செய்து கண்டறிந்திருந்தது. இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாதின் உளவாளிகள் என்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததும் கண்டறியப்பட்டது.
12 பேர் பிரிட்டனின் பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளதையடுத்து இதுத்தொடர்பாக விசாரணை மேற்க்கொண்டது பிரிட்டன். இதுத் தொடர்பாக நியமிக்கப்பட்ட புலனாய்வுக்குழு இஸ்ரேலுக்குச் சென்று புலனாய்வுச் செய்ததில் உண்மைப் புலப்பட்டதால் பிரிட்டன் இஸ்ரேலின் தூதரை வெளியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல் தூதரை(diplomat) வெளியேற்றும் அறிவிப்பை பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை செயலாளர் மில்லிபந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். பிரிட்டனின் பாஸ்போர்ட்டில் நெருங்கிய விபரங்களை கொலையாளிகள் போலி பாஸ்போர்ட்டில் பயன்படுத்தியுள்ளனர். இக்கொலையில் இஸ்ரேலுக்கு பங்குள்ளதாக பிரிட்டன் உளவு ஏஜன்சி கண்டறிந்துள்ளது என பி.பி.சி கூறுகிறது. பல்வேறு தூதரக அதிகாரிகளின் வற்புறுத்தலால் இஸ்ரேலின் முக்கியத் தூதரை (ambassador) பிரிட்டன் வெளியேற்றாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவர் கொலை:இஸ்ரேல் தூதரை வெளியேற்ற பிரிட்டன் நடவடிக்கை"
கருத்துரையிடுக