வாஷிங்டன்:ஜெருசலம் இஸ்ரேலின் ஒரு பகுதி என்றும் அங்கு குடியேற்ற கட்டிடங்களை கட்டுவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் இஸ்ரேல் ஆதரவாளர்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தும்பொழுது தெரிவித்தார்.
ஜெருசலம் இஸ்ரேலின் ஒரு பகுதி என்று அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஃபலஸ்தீனர்களுக்கும் தெரியும் என்று கூறிய நெதன்யாகு 3 நாடுகள் தீர்வுக்கு குடியேற்ற நிர்மாணம் தடையில்லை என்று தெரிவித்தார்.
1600 குடியேற்ற வீடுகளை கட்டுவதற்கான இஸ்ரேலின் தீர்மானம் அமெரிக்காவுடனான உறவில் சற்று சலனத்தை ஏற்படுத்திய பிறகு முதல் தடவையாக நெதன்யாகு வாஷிங்டன் சென்றுள்ளார். தங்களுடைய அமெரிக்காவுடனான உறவு என்றென்றும் நிலை நிற்கும் என்றும் அது ஒருபோதும் சீர்கெடாது என்றும் அவர் தெரிவித்தார்.
சமாதான நடவடிக்கைகள் எதார்த்தமாவதற்கு ஃபலஸ்தீன் அதாரிட்டியை குறைக்கூறிய நெதன்யாகு பேச்சுவார்த்தைக்கு முன்வர ஃபலஸ்தீன் அதாரிட்டிக்கு கோரிக்கை விடுத்தார்.
அணுசக்தித் திட்டத்தின் பெயரால் ஈரானை விமர்சித்தார் அவர். ஈரான் அணுசக்தித்திட்டத்தின் மூலம் சர்வதேச பாதுகாப்பிற்கு மிரட்டலை விடுத்துள்ளதாகவும், ஈரானுக்கெதிராக அவசர நடவடிக்கை மேற்க்கொள்ள கூட்டணி நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தார். ஃபலஸ்தீன் சமாதான நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்பாடுகளை கைவிட இருநாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார் ஹிலாரி கிளிண்டன்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஜெருசலம் இஸ்ரேலின் ஒரு பகுதி: நெதன்யாகு"
கருத்துரையிடுக