24 மார்., 2010

துபாயில் புதிய விமானநிலையம் ஜுன் 27இல் திறப்புவிழா

துபாய்:வான்வழி பயணத்தில் சிறப்புற்று விளங்கும் உலகின் பிரபல சுற்றுலா மற்றும் வர்த்தக நகரான துபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜெபல் அலி விமானநிலையத்திலிருந்து வருகிற ஜுன் 27 இல் விமானங்கள் பறந்து உயரும்.இவ்விமான நிலையத்திற்கும் அல் மக்தூம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்ப்பொழுது இரண்டரை லட்சம் டன் சரக்குகள் உட்கொள்ளும் கார்கோ டெர்மினல் இன்னும் ஒரு வருடத்தில் 6 லட்சம் டன்னாக உயரும் என விமானநிலைய வளர்ச்சி கார்கோ பிரிவு துணைத்தலைவர் ஆண்டோ வார்ஷ் தெரிவிக்கிறார்.

உலக நாடுகளுடன் வர்த்தகம், சுற்றுலா அதிகரிப்பதற்கான முயற்சியாகத்தான் 33 பில்லியன் டாலர் செலவில் புதிய விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள விமானநிலையம் மூலம் கடந்த ஆண்டில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 40.9 மில்லியன் அதாவது 4 கோடியே 9 லட்சம். இரண்டாண்டிற்குள் இந்த எண்ணிக்கை 75 மில்லியனாக உயர்த்த விமானநிலையம் விரிவாக்கப்பட்டுள்ளது.

2025 ஆண்டில் துபாயில் 140 மில்லியன் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விமானநிலையத்தில் துவக்கத்தில் 7 மில்லியன் பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர். பயணிகள் விமானம் பறக்கும் நாள் நிச்சயிக்கப்படவில்லை.

துபாய் நகரிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள விமானநிலையத்தில் 5 ரன்வேக்களும், 4 பயணிகள் டெர்மினல்களும், 18 கார்கோ டெர்மினல்களும் செயல்படும். வருடத்திற்கு 16 கோடி பேர் பயணம் செய்வதற்கான வசதிகளைக் கொண்ட இந்த விமான நிலையத்தில் 12 மில்லியன் டன் சரக்குகளை அனுப்ப இயலும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துபாயில் புதிய விமானநிலையம் ஜுன் 27இல் திறப்புவிழா"

கருத்துரையிடுக