அறந்தாங்கி:இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அறந்தாங்கியில் அரபு பள்ளி மாணவிகள் 6பேருக்கு தேர்வு மையம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி 6 பேரும் இன்று ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்றனர். அங்கே இந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்பட்டது.
ஸ்டேட் போர்டு தமிழ் தேர்வுதான் இவர்கள் எழுத வேண்டியது. ஆனால் ஆசிரியர் இவர்களுக்கு மெட்ரிகுலேசன் வினாத்தாள் கொடுத்தார். மாணவிகள் விளக்கிச் சொல்லியும் ஆசிரியர் கேட்கவில்லை.தேர்வு எழுதாமலே இந்த மாணவிகள் 2 மணி நேரம் அழுது கொண்டிருந்தனர்.
பின்னர் இவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து பள்ளி மேலாளர்களிடமும், தேர்வு மேற்பார்வையாளர்களிடமும் முறையிட்டார்கள். இதையடுத்து இந்த 6 மாணவிகளுக்கும் அவர்களுக்குரிய வினாத்தாள் கொடுக்கப்பட்டு மதியம் இவர்களுக்கு தனியாக தேர்வு நடைபெற்றது.
source:nakkheeran

0 கருத்துகள்: on "ஸ்டேட் போர்டு தமிழ் வினாத்தாளுக்குப் பதில் மெட்ரிகுலேசன் வினாத்தாள் - விளக்கிச் சொல்லியும் கேட்காத ஆசிரியர்"
கருத்துரையிடுக