அங்காரா:முதல் உலகப் போரின் போது துருக்கி ராணுவம் ஆர்மீனியர்களை கூட்டுப் படுகொலைச் செய்தது இனப் படுகொலை என அமெரிக்க சட்டமாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையடுத்து துருக்கி தங்கள் நாட்டு தூதரை அமெரிக்காவிலிருந்து திரும்ப அழைத்தது.
1915 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்மினிய கூட்டுப் படுகொலையை இனப் படுகொலையாக கருதவேண்டுமென்ற ஒபாமா அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தீர்மானம் தான் அமெரிக்க-துருக்கி இடையிலான தூதரக உறவை சிக்கலாக்கியுள்ளது.
ஆர்மீனிய படுகொலை விவகாரத்தில் கண்டும் காணாதது போல் இருக்கும் துருக்கியின் நடவடிக்கையில் நியாயப்படுத்துவதற்கு ஒன்றுமில்லை என பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஹோவர்டு பெர்மன் கூறினார்.
ஆனால் ஆர்மீனியாவுக்கும், துருக்கிக்கும் இடையில் சமாதான முயற்சிகள் நடக்கும் வேளையில் குழப்பமான வரலாற்றை மதிப்பீடுச் செய்யும் உரிமை வெளிநாட்டு நபர்களுக்கு இல்லை என்று துருக்கியின் ஆளும் கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுவாத் கினிக் லியோக்லு தெரிவித்தார்.
அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது துருக்கி மக்களுக்கு எந்தவொரு மதிப்பும் இல்லை என துருக்கி அதிபர் அப்துல்லாஹ் குல் தெரிவித்தார். அமெரிக்காவின் கூட்டணி நாடுகளில் ஒன்றான துருக்கியுடனான பிரச்சனை இரு நாடுகளுக்குமிடையிலுள்ள உறவை பாதிக்கும். அமெரிக்காவிற்கெதிராக துருக்கி முழுவதும் கண்டனப் பேரணிகள் நடந்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமெரிக்காவின் இனப்படுகொலைக் குறித்த விமர்சனம்: துருக்கி தூதரை திரும்ப அழைத்தது"
கருத்துரையிடுக