சென்னை:மதுக் கடைகளை அகற்றக் கோரி தமிழகம் தழுவிய மறியல் போராட்டத்திற்கு மனித நேயக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது.சென்னையில் ஐஸ் அவுஸ் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது திருவல்லிக்கேணி நெடுஞ் சாலையில் உள்ள மதுக்கடை முன்பு மறியல் நடத்த ஐஸ் அவுஸ் பகுதியில் மனித நேய மக்கள் கட்சியினர் திரண்டனர். அவர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்களில் பலர், தப்பி ஓடி டாஸ்மாக் மதுக்கடை மீது கல்வீசி தாக்கினார்கள்.இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் புரசைவாக்கத்தில் ஹைதர் அலி தலைமையில் மனித நேய மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு விரைந்து சென்று 250 பேரை கைது செய்தனர்.
கோவையில் நடந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடையின் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் போலீசார் காயம் மடைந்தனர்.
கோவையில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடத்தில் டாஸ்மாக் கடைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு த.மு.மு.க மாநில செயலாளர் கோவை உமர், தலைமை தாங்கினர். ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர், அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். ஆர்பாட்டம் நடைபெற்ற இடத்தில் உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலிசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து.
ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடையை தாண்டிச்செல்ல முயன்றனர், அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சமயத்தில் யாரோ சிலர் டாஸ்மாக் கடை மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பெண் போலீஸ் கற்பகவள்ளி உள்பட 1பெண் போலீசார் படுகாயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் திருச்சி, சேலம், இராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ம.ம.க சார்பிலும் மதுக் கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
source:thatstamil,kovaimediavoice,maalaimalar
0 கருத்துகள்: on "மதுக் கடைகளை அகற்றக் கோரி ம.ம.க சார்பில் தமிழகம் தழுவிய மறியல் போராட்டம்"
கருத்துரையிடுக