ரியாத்:"அரப் நோபல்" என்றழைக்கப்படும் மன்னர் ஃபைஸல் விருது ஆண்டுதோறும் சவூதி அரேபிய அரசின் சார்பாக பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகானிற்கு வழங்கப்படுகிறது. இவ்விருதைப் பெற சவூதி அரேபியா தலைநகர் ரியாதிற்கு வருகைதரும் உருதுகான் சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ்வுடன் மேற்காசியப் பிரச்சனைகள் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என ரியாதின் துருக்கி தூதர் அஹ்மத் முக்தார் கூன் தெரிவித்தார்.
விருது பெற வரும்பொழுது உருதுகான் மன்னர் ஃபைஸல் விருது பவுண்டேசனின் தலைமையில் நடைபெறவிருக்கும் கண்காட்சியையும் திறந்துவைப்பார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மன்னர் ஃபைஸல் விருது பெற சவூதி செல்லும் துருக்கி பிரதமர் சவூதி மன்னருடன் மேற்காசியா பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை"
கருத்துரையிடுக