ஹேக்:போஸ்னியாவில் 1992 முதல் 1995 ஆம் ஆண்டுவரை நீண்ட மிகப்பெரிய முஸ்லிம் இனப் படுகொலைக்கு தலைமைத் தாங்கிய செர்பிய அதிபரும், ராணுவ தலைமைத் தளபதியாகவுமிருந்த ரதோவான் கராஜிச் சர்வதேச நீதிமன்றத்தில் போஸ்னியா போர் புனிதமானது எனக்கூறி தனது தலைமையில் நடைபெற்ற இன அழித்தொழிப்பை நியாயப்படுத்தினான்.
தேசத்தை காப்பாற்ற இப்படுகொலையை மேற்க்கொண்டதாகவும், அது புனிதமானதும், நீதியானதுமாகும் என்று கூறினான் கராஜிச். 1992 முதல் துவங்கப்பட்ட போஸ்னிய முஸ்லிம்களுக்கெதிரான போரில் சுமார் 1 லட்சம் போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். 20 ஆயிரம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு இரையாயினர். 22 லட்சம் முஸ்லிம்கள் நாடு துறந்து சென்றனர்.
போஸ்னியாவின் கசாப்புக்காரன் என்றுக் கூறப்படும் கராஜிச் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிக அதிகமாக நரவேட்டையாடியவன். ஸ்ரெப்ரெனிகா என்ற இடத்தில் 8000க்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட முஸ்லிம்களை கொன்று பெரிய குழிகளில் போட்டு புதைத்ததனர் கராஜிச் தலைமையிலான செர்ப் வெறியர்கள்.
கராஜிச் மீது 11 குற்றங்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கராஜிச்சிற்கெதிராக வாதிடும் வழக்கறிஞர்கள் கூறுகையில், "கராஜிச் போஸ்னிய முஸ்லிம்களுக்கெதிராக இனப்படு கொலையை நடத்திடும் பொழுது அவர்களை இந்த பூமியின் முகத்திலிருந்து காணாமல் போகச் செய்வோம்" என்பதே நோக்கமாக இருந்தது.
போஸ்னிய இனப்படு கொலையில் உயிர்தப்பிய பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட் வாசலுக்கு வெளியே கூடி தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரினர்.
செய்தி:இஸ்லாம் ஆன்லைன்.நெட்
0 கருத்துகள்: on ""போஸ்னியா இனப்படுகொலை புனிதமானது": செர்பிய வெறியன் கராஜிச்"
கருத்துரையிடுக