ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அளித்த சிபாரிசுகளின் அடிப்படையில் இந்தியா முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இடஒதுக்கீட்டை நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்கக்கோரி இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த 2 மாத நீண்ட பிரச்சாரத்தின் இறுதியாக இடஒதுக்கீட்டைக் கோரும் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரகளின் பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பும், பேரணியும் வருகிற மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் என கடந்த பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய தினங்கள் பெங்களூரில் நடைபெற்ற பாப்புலர்ஃப்ரண்டின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் லாபத்திற்காக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தவறான தகவலை பரப்பி வரும் பா.ஜ.க விற்கு பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துக் கூறியதாவது, "இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டம் வழங்கும் உரிமை. உயர் மட்ட அரசு கமிட்டிகள் முஸ்லிம்களின் பிற்பட்ட நிலையை உறுதிச் செய்துள்ளன. மேலும் இடஒதுக்கீட்டை பெற முஸ்லிம்கள் தகுதியானவர்கள் என நிரூபித்துள்ளன." என்றார்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு தீர்மானங்களைப் பற்றி ஷெரீஃப் கூறியதாவது: "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசு விலைவாசியை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கிறது. அரசுக்கு விலைவாசியை கட்டுப்படுத்த கடமை இருந்த பிறகும் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுத்ததாக தெரியவில்லை. மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் சாதாரண மக்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது. இது மேலும் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர வழிவகுக்கும். மத்திய அரசின் இந்த பட்ஜெட் தாராளமயமாக்கல் காரர்களையும், கார்ப்பரேட்டுகளையும் காப்பாற்றுவதில்தான் அரசுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய அளவிலான இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம் பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக மக்களை ஒன்றிணைக்க பாப்புலர் ஃப்ரண்டால் முடிந்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஸ்கூல் சலோ(பள்ளிச்செல்வோம்) என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை துவங்குகிறது. இது அனைத்து குழந்தைகளும் செகண்டரி ஸ்கூல் வரை பள்ளிக்கூடம் செல்லவேண்டும் என்பதாகும். இந்தியாவின் பல பகுதிகளிலும் பள்ளிக்கூட படிப்பிற்கான அட்மிஷன் துவங்கும் முன் ஸ்கூல் சலோ பிரச்சாரத்தை ஒவ்வொரு ஆண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தி வருகிறது. ஒவ்வொரு குடிமகன்களின் பெயர்களை பதிவுச் செய்து தேசிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை வாபஸ் பெற கோருகிறது. அஸ்ஸாமில் சிறுபான்மை மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் தொடரும் தவறான நடவடிக்கைகளால் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறார்கள்". இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் தெரிவித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவிற்கு தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "மார்ச் 18ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்டின் இடஒதுக்கீட்டைக் கோரும் பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பு பேரணி"
கருத்துரையிடுக