போபால்:மத்தியபிரதேஷ் மாநிலம் தேவாஸ் மாவட்டத்திலிலுள்ள காடேகான் நகரில் ஒரு முஸ்லிம் பெண்ணை ஹிந்து சமூகத்தைச் சார்ந்த ஒருவர் கடத்திச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் ஹோலிப் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த அவ்வாலிபரின் குடும்பத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தாலும், உறுதிச் செய்யாத தகவல்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது. கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தை இதுவரை கண்டறியப்படவில்லை. நிலைமை மோசமாகியதைத் தொடர்ந்து காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு 144 தடவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் மோதல் தொடர்ந்தது. ஒரு கும்பல் முஸ்லிம்களின் வீடுகளையும், கடைகளையும் தீவைத்துக்கொழுத்தி நாசம் செய்தது. இதனால் ஊரடங்கு உத்தரவு நேற்று(01/03/10) மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்டது.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "மத்தியபிரதேஷ்: கலவரத்தில் நான்கு பேர் படுகொலை"
கருத்துரையிடுக