லண்டன்:தாலிபான் தலைவர்களை கைது செய்த பாகிஸ்தானின் நடவடிக்கை தாலிபான்களுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையை நிறுத்துவைப்பதற்கு காரணமானதாக ஐ.நா பொதுச்செயலாளரின் ஆப்கானிற்கான சிறப்புத்தூதர் காய் இதே தெரிவித்துள்ளார்.
"தாலிபான் தலைவர்களுடன் நேரடியாக துபாயிலும், இன்னும் சில இடங்களிலும் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. இப்பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துக்கொண்டிருந்தது. இனி இப்பேச்சுவார்த்தை பரஸ்பர நம்பிக்கையோடு முன்னேற்றம் அடைய வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம்". என பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதாரின் கைதுதான் பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். இப்பகுதியில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பதுக் குறித்து பாகிஸ்தான் உணரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே பரதாரின் கைதுக்குறித்து ஆப்கான் அதிபர் கர்ஸாயி அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தாலிபான் தலைவர்கள் கைது: ரகசிய பேச்சுவார்த்தையை பாதித்ததாக ஐ.நா அதிகாரி"
கருத்துரையிடுக