காஸ்ஸா:ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸ்ஸாவில் பரவலாக விமானத் தாக்குதலை நடத்தியது. நேற்று நடு இரவு வரை நடந்த தாக்குதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. சில இடங்களில் ஏவுகனைத் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தியதாக அல் ஜஸீரா தெரிவிக்கிறது.
எகிப்து எல்லையில் மூன்று சுரங்கப்பாதைகளிலும், ஒரு வொர்க்ஷாப்பிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை காஸ்ஸாவிலிருந்து நடந்த ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் அஸ்கலனின் தாய்லாந்து வம்சாவழியைச் சார்ந்த விவசாயி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
தாக்குதலுக்கான பொறுப்பை அன்சாருஸ்ஸுன்னா என்ற அமைப்பும், ஃபத்ஹின் போராளிப்பிரிவான அல் அக்ஸா இரத்த சாட்சிகள் இயக்கமும் ஏற்றுக்கொண்டன. மஸ்ஜிதுல் அக்ஸாவிலும், மஸ்ஜிதே இப்ராஹீமிலும் இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்புகளுக்கான பதிலடி இது என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வமைப்புகள் கூறியுள்ளன.
ஆனால் இத்தாக்குதலின் பின்னணியில் ஹமாஸ் என்றும், இத்தாக்குதலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதாகவும் இஸ்ரேல் துணை பிரதமர் ஸில்வான் ஷாலோம் குற்றஞ்சாட்டுகிறார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் அனுமதிக்கவில்லை. 50 வயதிற்கு மேற்பட்டோர்தான் அனுமதிக்கப்பட்டனர். இது மோதலுக்கு காரணமானது. பல இடங்களில் இஸ்ரேல் விரோத போராட்டங்கள் நடைபெற்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேருக்கு காயம்"
கருத்துரையிடுக