பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க தளபதி தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
லஷ்கர்இ தொய்பா அமைப்பு இலங்கையில் தங்கியிருக்கிறது என்று நிரூபிப்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என இலங்கையின் பிரதி அமைச்சர்களில் ஒருவரான கருணா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின், இந்த அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்று வெளியாகும் செய்திகள் தொடர்பாக அரசுக்கு முறையான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
மேலும்,இலங்கையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என்று வெளியான செய்தியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் மறுத்துள்ளது.
source:inneram
0 கருத்துகள்: on "இலங்கையின் மீது லஷ்கர்-இ-தொய்பா தாக்குதல் நடத்த திட்டம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரித்தது"
கருத்துரையிடுக