ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக வரும் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடந்த வார இறுதியில் திடீர் விஜயமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.அப்போது தாலிபான்களை அழிக்க அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இருப்பதாகவும், எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தாலிபான்களை ஒழிக்க கடுமையான மற்றும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன.குறிப்பாக தாலிபான்களின் கோட்டை என்று கூறப்படும் கந்தஹாரில் வருகிற ஜூன் மாதம் கடுமையான தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வாஷிங்டனிலிருந்து வெளியாகும் என்பிசி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
வருகிற மே மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 1,50,000 மாக அதிகரிக்கப்பட்டுவிடும். கந்தஹாரைச் சுற்றிலும் தற்போது 4,000 அமெரிக்க படையினர் உள்ளனர். இந்நிலையில் கூடுதல் படைகள் இங்கு வரவழைக்கப்பட்டு, தாலிபான்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அமெரிக்க இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

source:webdunia
0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக வரும் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த யு.எஸ் திட்டம்"
கருத்துரையிடுக