உஜ்ஜயினி:மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினி அருகே உள்ள கோட் மொகால்லா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஸாஜாத்.
சம்பவத்தன்று இவரது ஆட்டோவில் மும்பையைச் சேர்ந்த நகை வியாபாரி பாரத் ஜெயின் பயணம் செய்தார். ஆட்டோவை விட்டு இறங்கியபோது, அவர் தன்னிடமிருந்த பையை மறந்துபோய் ஆட்டோவிலேயே விட்டு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் காலை ஆட்டோவை சுத்தப்படுத்த சென்றபோது அங்கு ஒரு பை கிடப்பதை ஸாஜாத் பார்த்தார்.அந்த பையில் சுமார் ரூ.32 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து நகர பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ஹமீதுவிடம் தெரியப்படுத்தினார்.அவர்கள் 2 பேரும் நகைகள் அடங்கிய பையை கொண்டு வந்து போலீசில் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி போலீசார் ரூ.5 ஆயிரம் பரிசு அறிவித்துள்ளனர். நகை பெற்றுக் கொண்ட வியாபாரி ஜெயினும் ஆட்டோ டிரைவர் ஸாஜாத்துக்கு ரூ.1 லட்சம் அன்பளிப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
source:newskerala
0 கருத்துகள்: on "ஆட்டோவில் தவறவிட்ட ரூ.32 லட்சம் நகையை ஒப்படைத்த டிரைவரின் நேர்மை"
கருத்துரையிடுக