31 மார்., 2010

ஷேக் அஹ்மத் மரணம்:அதிகாரப்பூர்வ அறிவிப்பு

துபை:மொராக்கோவில் க்ளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஷேக் அஹ்மத் பின் ஸாயித் அல் நஹ்யான் மரணித்துவிட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வாம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யானின் இளைய சகோதரரும் அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி மானேஜிங் டைரக்டருமாவார் ஷேக் அஹ்மத்.மேலும் ஸாயித் ஃபவுண்டேசன் ஃபார் சாரிட்டி அண்ட் ஹியூமனிட்டேரியன் வர்க்ஸ் சேர்மன் பதவியையும் ஷேக் அஹ்மத் வகித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மொராக்கோவில் க்ளைடர் விமானம் விபத்திற்குள்ளானது. ஷேக் அஹ்மதிற்கு 39 வயதாகும். இறந்த உடல் நேற்று(30/03/10) மொராக்கோவிலிருந்து விமானம் மூலம் அபுதாபிக்கு கொண்டுவரப்பட்டது. அஸர் தொழுகைக்குப் பின்னர் ஜனாஸா தொழுகை நடத்தி ஷேக் ஸாயித் மஸ்ஜிதில் உடல் அடக்கம் செய்யப்படும்.

ஷேக் அஹ்மதின் மரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன் கிழமையிலிருந்து 3 நாள்களுக்கு துக்கம் அனுஷ்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷேக் அஹ்மத் மரணம்:அதிகாரப்பூர்வ அறிவிப்பு"

கருத்துரையிடுக