காந்திநகர்:குஜராத் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையைப் புறக்கணித்து இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இரத்தக்கறை படிந்த ஹிந்துத்துவா பயங்கரவாதியான மோடியுடன் நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் கலந்துக் கொண்டார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில்தான் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
நரேந்திர மோடி குல்பர்க் சொசைட்டி கூட்டுப்படுகொலை வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவால் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் தான் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் மோடிக்கு வலதுபுறம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும், இடது புறம் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்யாயும் அமர்ந்திருந்தனர். ஜிம்பாப்வேயின் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஜி.எ.எம்.இப்ராஹீமும் பங்கெடுத்தது வெட்கக்கேடான ஒன்றாகும்.
குஜராத் இனப் படுகொலைத் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆளான மோடியுடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளக் கூடாது என குல்பர்க் சொசைட்டியில் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி.இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரியும், இனப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களும் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடமும், ஜி.எ.எம்.இப்ராஹீமிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டுத்தான் இவர்களிருவரும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளனர். நிகழ்ச்சியில் மோடி உரை நிகழ்த்தவில்லை.
எஸ்.ஐ.டியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மோடியுடன் உச்சநீதிமன்ற நீதிபதி ஒரே மேடையில் பங்கேற்கக்கூடாது என காங்கிரஸ் கட்சியும் கூறியிருந்தது.
அப்பாவி முஸ்லிம்களை மிகக்கொடூரமாக கொன்றொழிப்பதற்கு காரணமான மனிதநேயத்தின் எதிரியும், ஹிந்துத்துவா தீவிரவாதியுமான மோடியுடன் ஒரே மேடையில் கலந்துக் கொள்வது தவறான செய்தியை மக்களுக்கு அளிக்கும் இதனால் குஜராத்தில் நீதி கேள்விக்குறியாகும் என்றும் குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டிருந்தோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "முஸ்லிம்களை நர வேட்டையாடிய மோடியுடன் ஒரே மேடையில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி"
கருத்துரையிடுக