எஸ்.ஐ.டி தலைவர் ஆர். கே ராகவன் அஹமதாபாதில் இருந்தும், 27கி.மீ தொலைவில் உள்ள நரேந்த்ர மோடியின் விசாரணை நடந்த காந்திநகருக்கு விசாரணைக்காக வரவில்லை. ஆகவே, வேறுவழியில்லாமல் மோடியின் விசாரணை அவரின் ஜுனியர் ஏ.கே.மல்ஹோத்ரா மேற்கொண்டார்.
எஸ்.ஐ.டி தலைவர் ராகவன் விசாரணையில் பங்கேற்காமல் இருந்தது புரியாத புதிராக இருந்தாலும், இதுக்குறித்து, ஒரு எஸ்.ஐ.டி அதிகாரி கூறுகையில் தாங்கள் இவ்வாறு தான் விசாரணையை திட்டமிட்டதாக தெரிவித்தார். வெளி தகவல்கள் தெரிவிக்கையில், மோடியின் விசாரணை காந்தி நகரில் நடைபெறும் போது, ராகவன் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒத்திகையில் இருந்துள்ளார்.
21 மார்ச் 2010, அன்று மோடிக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பியதாக கூறிய ராகவன், பின்னர் அந்த வாரத்தை கூறியதாக பல்டி அடித்ததையும் இங்கு சற்று சிந்தித்துப் பார்க்க வேன்டும். சிட்டிஜென்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் & பீஸ் (சி.ஐ.பி) என்ற என்.கி.ஒ, எஸ்.ஐ.டி தலைவர் ராகவன் குற்றவாளிகளிடம் மிகவும் நாசுக்காக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியதும் நினைவில் இருக்கலாம்.
இதற்கு அப்பாற்பட்டு, நரோடா பாட்டியா மற்றும் குல்பர்க் வழக்கை விசாரித்து வந்த தலைமை வக்கீல் ஆர்.கே.ஷா தன் பதிவியிலிருந்து ராஜினாமா செய்தது சற்று பாறத்தை கூட்டுகிறது.
இந்த சூழலில், எஸ்.ஐ.டியின் விசாரணை அறிக்கை ஏப்ரலில் 30ஆம் தேதி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
0 கருத்துகள்: on "குஜராத்:விசாரணையில் பங்கேற்காத விசாரணை ஆணையத்தின் தலைவர். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்களா?"
கருத்துரையிடுக