புதுடெல்லி:மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கமிசன் மசோதா கல்வித் துறையை நவீன காலணிமயமாக்குமென்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டுகிறது.
இதற்கெதிராக மார்ச் 10 ஆம் தேதி துவக்கப்பட்ட தேசிய பிரச்சாரம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி முடிவுறும். தேசிய கமிஷனின் இந்த திட்டம் நமது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிராகும். கமிஷனின் திட்டப்படி எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவியும், மாநிலங்கள் இதில் வெறும் பார்வையாளராக மாறும்.
மாணவர்களுக்கும் அவர்களுடைய பொறுப்பாளர்களுக்கும் அதிக சுமையை ஏற்படுத்தும் நுழைவுத்தேர்வு முறையை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ரத்துச்செய்துக் கொண்டிருக்கும் பொழுது பொறியியல், மருத்துவம், வணிகவியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான முயற்சியும் கண்டனத்திற்குரியதாகும்.
கல்வியை சமச்சீர் பட்டியலிருந்து (concurrent list) ஒருங்கிணைந்த பட்டியலுக்கு (Union list) மாற்றும் மத்திய அரசின் முயற்சி நமது கூட்டாட்சித் தத்துவத்தை தகர்க்கும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறுகிறது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது கல்வித் துறையை மேலும் வணிகமயமாக்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஏழை மாணவர்களுக்கு அளிக்கும் இலவசக் கல்வியை ரத்துச் செய்து விட்டு கல்வியை வியாபாரமாக்குவர்.
நாட்டில் பெரும்பான்மையினரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுகூலமாக கல்வித் துறையில் முக்கியத்துவம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய பிரச்சாரத்தின் பகுதியாக சுவரொட்டி, மடகோலை, பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும். கல்வித் துறையை நவீன காலணி மயமாக்குதலுக்கு எதிராகவும், வியாபாரமாக்குவதற் கெதிராகவும் நடைபெறும் போராட்டத்தில் பங்காளர்களாகுவதற்கு அனைத்து மாணவர்கள் அமைப்பினருக்கும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "நவீன காலணிமயமாக்கலுக்கெதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய அளவிலான பிரச்சாரம்"
கருத்துரையிடுக