புனே:17 பேர் மரணத்திற்கு காரணமான புனே குண்டுவெடிப்பு குறித்த புலனாய்வு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளை நோக்கி நகருகிறது.
தீவிர வலதுசாரி இயக்கங்களான சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை புலனாய்வு அதிகாரிகள் புனே குண்டுவெடிப்பில் சந்தேகிக்கின்றனர். இந்த அமைப்பைச் சார்ந்தவர்களை விசாரணைச் செய்ததாக மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
2003 ஆம் ஆண்டு அபினவ் பாரத்தின் தலைமையில் நடந்த ஆயுத தொழிற்சாலையில் பங்குப் பெற்றவர்களிடமும் விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது. மலேகான் குண்டுவெடிப்பில் பங்கேற்று சிறையிலடைக்கப்பட்டிருக்கும் கர்னல் புரோகித்தின் தலைமையில்தான் இந்த ஆயுத தொழிற்சாலை இயங்கியது.
புலனாய்வு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், குற்றவாளிகளை குறித்த முக்கிய விபரங்கள் கிடைத்துள்ளதாகவும் புனே போலீஸ் கமிஷனர் சத்தியபால்சிங் தெரிவித்தபோதிலும், அவர்கள் யார் என்பதுக்குறித்த விபரத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில்தான் புலனாய்வு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் காவல்துறையும், மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும் மற்றும் தேசிய புலனாய்வு ஏஜன்சியும் புனே குண்டுவெடிப்புத் தொடர்பாக புலனாய்வுச் செய்து வருகின்றன.
தேசிய புலனாய்வு ஏஜன்சி இதுத் தொடர்பான விபரங்களை மத்திய அரசுக்கு அறிக்கை அளித்த போதிலும், அதன் முக்கிய விபரங்களை வெளியிடவில்லை. எல்லா விஷயங்களையும் தக்க நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஏ.டி.எஸ் தலைவர் கெ.பி.ரகுவன்ஷி கூறுகிறார்.
குண்டுவெடிப்புத் தொடர்பாக நூறுபேரிடம் விசாரணை மேற்க் கொள்ளப்பட்டது. விசாரணையின் துவக்கத்தில் சிமி உள்ளிட்ட அமைப்புகளை சந்தேகத்திற்குட்படுத்தி புலனாய்வு மேற்க்கொள்ளப்பட்டது.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி புனே ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கிடையில் ஜெர்மன் பேக்கரியின் பணியாளர்களின் கவனமின்மையால்தான் குண்டுவெடிப்பு நடந்ததாக நகர போலீஸ் கமிஷனர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிங்கின் கூற்றுபடி,"அனாதையாக கிடந்த அந்த பையை சில வாடிக்கையாளர்கள் பார்த்து அதை கேஷியரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் அதிக வேலை பளு காரணமாக கண்டு கொள்ளவில்லை, காவல் துறையிடமும் தெரிவிக்கவுமில்லை. சரியாக 20 நிமிடத்திற்கு பிறகு வெடிகுண்டு அங்கே வெடித்தது.
ஜெர்மன் பேக்கரியின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் விழிப்புணர்வுடன் இருந்திருந்தால்,அப்பாவி உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்." என்றும் அவர் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "புனே குண்டு வெடிப்பு: விசாரணை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளை நோக்கி"
கருத்துரையிடுக