பரேலி:14தினங்களாக வன்முறை தொடரும் மேற்கு உத்தரபிரதேசத்தின் பரேலியில் நேற்று பஜ்ரங்தள் என்ற ஹிந்து பயங்கரவாத இயக்கத்தின் வெறிச் செயலில் 20 க்கும் மேற்பட்ட கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டு நாசப்படுத்தப்பட்டன.
கும்பலாக வந்த வன்முறைக் கும்பல் பழமையான குதுப்கான மார்க்கெட்டில் 20க்குமேற்பட்ட கடைகளை கொள்ளையடித்ததோடு அவற்றை தீவைத்துக் கொளுத்தினர். இதனைத் தொடர்ந்து பரேலி மாவட்டத்தில் அதிகமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி.பானுபிரசாத் சிங் கூறினார்.
வன்முறை அதிக நடக்கும் பகுதிகளில் கூடுதல் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். பரேலியின் 6 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 இல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. P.A.C(PROVISIONAL ARMED CONSTABULARY) கமாண்டர் ஜோதி நாராயணன், மூன்று எஸ்.பிக்கள், நான்கு டி.எஸ்.பிக்கள், உட்பட ஒன்பது மூத்த போலீஸ் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மார்ச் இரண்டாம் தேதி நடைப்பெற்ற நபிதின பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து வன்முறை தலைத்தூக்கியது. வன்முறையைத் தூண்டும் விதமாக ஆவேசமாக பேசியதாக குற்றஞ்சாட்டி காவல்துறையினர் பிரபல மார்க்க அறிஞர் மெளலானா தவ்கீர் ரஸா கானை கைதுச் செய்தது கடும் எதிர்ப்பை உருவாக்கியது.
பின்னர் மெளலானா நிரபராதி என்பதை கண்டறிந்து விடுவித்தது அறிந்து சங்க்பரிவார்கள் வன்முறையில் இறங்கினர். வெள்ளிக்கிழமை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான வாகனங்களும், வியாபார நிறுவனங்களும் தகர்க்கப்பட்டன. நகர எஸ்.பி ராகேஷ் ஜோளி உள்ளிட்ட ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பஜ்ரங்தள் வெறியாட்டம்: பரேலியில் 20 கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன"
கருத்துரையிடுக