22 ஏப்., 2010

எங்கே போனது அந்த 10 லட்சம் ரூபாய் நிதி உதவி?

டில்லி:ஏற்கனவே பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு, மனஉளைச்சலில், பண கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு, மேலும் அதிர்ச்சிகள் வந்த வண்ணம் உள்ளன.

13 நவம்பர் 2008, டில்லி குண்டு வெடிப்பு நடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதிவுதவி வழங்குவதாக அப்போதய சமாஜ்வாடி கட்சி தலைவர் அமர் சிங் கூறியிருந்தார்.

அதன்படி, சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் ஜாமியா மில்லியா பாய்ஸ் அசோசியேஷென் (JOBA) என்ற இயக்கத்திடம் தன் நிதி உதவியை அளித்தாக கருதப்படுகிறது. தற்போது, அதாவது 1-1/2 வருடங்களுக்கு பிறகு, JOBA அதிகாரிகள் அவ்வாறு எந்த உதவியும் பெறப்படவில்லை என்று மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அதன் தலைவர் ஜாவித் ஆலம் கூறுகையில் ஆம், சமாஜ்வாதி கட்சியிடம் 10 லட்சம் பெறப்பட்டது உன்மைதான், ஆனால் அது அசோசியேஷெனின் முன்னேற்றத்திற்கு தான் அளிக்கப்பட்டது என்ற பதிலை அளித்தார்.

ஆனால் JOBA உறுப்பினர் மற்றும் ராஜ்ய சபா சமாஜ்வாடி எம்.பி வேறு ஒரு பதிலை அளித்துள்ளார். அதாவது முதலில் அந்த பணம் அசோசியேஷெனிற்கு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதை பின்னர் பாதிகப்பட்ட அப்பாவி இளைஞ்னர்களின் குடும்பத்திற்கு அளிக்க உத்தரவு பிறபித்ததாக கூறுகிறார் கமல் அக்தர்.

சற்று பொறுங்கள், விஷயம் முடிந்துவிடவில்லை! இன்னமும் ஒரு அதிர்ச்சியுள்ளது! இவ்விவகாரத்தில் ஒரு பைசாவும் சாமஜ்வாதியிடம் இருந்து பெறப்படவில்லை. நாங்கள் யுனிவர்சிடி லீகல் கமிட்டி மூலம் ரூபாய் 25,000 கசோலையாகவும் ரூபாய் 75,000 பணமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்ததாக ஜாவித் ஆலம் கூறுகிறார்.

இதை ஜாமியா கமிட்டியிடம் சரிபார்த்தபோது, அவ்வாறு எதுவும் பணம் அளித்தாக எங்கள் நினைவில் இல்லை என்று பதில் வந்தது. பிறகு வெறும் ருபாய் 25,000 காசோலை மட்டும்தான் (பண உதவி இல்லை) அளிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.அதுவும், இந்த உதவி 27 செப்டம்பர் 2008யல் அளிக்கப்பட்டது, (அதாவது சமாஜ்வாடி கட்சியிடமிருந்து தொகை வந்ததாக கூறும் தேதியிலிருந்து 2 மாதங்களுக்கு முன்னதாகவே...)

ஆக சமாஜ்வாடி கட்சியிடமிருந்து ஒரு நயா பைசா கூட ஜாமியா அசோசியேஷனிற்கு வரவில்லை என்பது தான் யதார்தமான உண்மை.

இதில் வருந்துவதர்குறிய விசயம் என்னவெனில் கைது செய்யப்பட்ட அனைத்து இளைஞர்களும் மிகவும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்கள். ஒரு இளைஞனின் அன்னன் பண உதவி கோரி ஜாமியாவை அனுகியதையடுத்து சமாஜ்வாதியின் இந்த கபட நாடகம் அம்பலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
source:Press.tv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எங்கே போனது அந்த 10 லட்சம் ரூபாய் நிதி உதவி?"

கருத்துரையிடுக