பெங்களூர்:சின்னசுவாமி ஸ்டேடியத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்க சற்று நேரத்திற்கு முன்பு நடந்த சக்திக்குறைந்த 2 குண்டுவெடிப்புகளில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.இதில் ஐந்துபேர் பாதுகாப்பு அதிகாரிகளாவர். ஸ்டேடியத்தின் 12-வது கேட்டிற்கு அருகில் முதல் குண்டுவெடிப்பு நடந்தது. போட்டி துவங்க 45 நிமிடத்திற்கு முன்பு இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஸ்டேடியத்தின் அனில்கும்ப்ளே சர்க்கிளில் இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பு நிகழும்பொழுது ஸ்டேடியத்தில் 35 ஆயிரம் பார்வையாளர்கள் இருந்தனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து போட்டி துவங்கியது. பெங்களூரின் ராயல் சேலஞ்சர்ஸும், மும்பை இண்டியண்சுக்குமிடையே போட்டி நடைபெற்றது.
சக்திக் குறைந்த இரண்டு குண்டுகள் வெடித்ததாக துணை போலீஸ் கமிஷனர் அலோக் குமார் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பெங்களூரு ஸ்டேடியத்தில் இரண்டு சக்திக் குறைந்த குண்டுவெடிப்பு 15 பேர் காயம்"
கருத்துரையிடுக