பீஜிங்:சீனாவில் பூகம்பத்தில் மரணித்த 700 நபர்களின் உடல்களை கூட்டுச் சிதையை ஏற்பாடு செய்து தகனம் செய்யப்பட்டன.
மரபுகளுக்கு மாற்றமாக இறந்த உடல்களை நெருப்பில் தகனம் செய்வது இதுதான் முதல் முறையாகும். மரணித்தவர்களில் ஏராளமானோர் புத்த பிக்குகளும், திபெத்தைச் சார்ந்தவர்களுமாவார்கள். வழக்கமாக திபத்தைச் சார்ந்தவர்கள் இறந்தால் அவர்களின் உடல்கள் திறந்தவெளியில் கழுகும் மற்றும் இதர விலங்கினங்கள் உண்பதற்காக வைக்கப்படும். ஆனால் பூகம்பத்தால் சிதிலமடைந்த இடிந்துபோன கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்ட அழுகிய உடல்களை திறந்தவெளியில் வீசுவது சுகாதாரக்கேட்டை உருவாக்கும் என்பதால் பரம்பரையான மரபுகளை மீறி அனைத்து உடல்களும் ஒரே இடத்தில் நெருப்பில் தகனம் செய்யப்பட்டன. மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளுடன் இந்த தகனம் நடைபெற்றது.
பூகம்பத்தால் பாதித்த பிரதேசங்களில் புணர்நிர்மாணம், பேரிடர் மீட்புச்சேவை களத்திலிருப்பது புத்த மத பிக்குகளாவர். கடந்த புதன் கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் 1339 பேர் மரணித்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 322 பேரை காணவில்லை. காயமடைந்த 11849 பேரில் 1279 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட திபெத்தின் யூஷுவில் குடிவெள்ளம் வழங்க அரசு நேற்று ஏற்பாடுச் செய்தது. கடுமையான பனியும், காலநிலையும் பேரிடர் மீட்புப்பணிகளை பாதித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சீனா:மத மரபுகளைக் கடந்து பூகம்பத்தில் இறந்தவர்களின் உடல்கள் ஒன்றாக தகனம் செய்யப்பட்டன"
கருத்துரையிடுக