வாஷிங்டன்:சட்டத்திற்கு புறம்பான ரீதியில் ஆயுதங்களை சேகரித்தும் தவறான விபரங்களை அளித்ததன் பேரில் அமெரிக்காவில் பிரசித்திப் பெற்ற தனியார் பாதுகாப்பு ஏஜன்சியான ப்ளாக் வாட்டரின் முன்னாள் தலைவர் மீது நீதிமன்றம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
சட்டத்திற்கு புறம்பான ரீதியில் ஆயுதங்களை கைவசம் வைத்திருந்ததாகவும், உண்மையை மறைத்துவிட்டு பேட்டியளித்தாகவும் ப்ளாக் வாட்டரின் முன்னாள் தலைவர் காரி ஜாக்ஸனின் மீது அமெரிக்காவின் வடக்கு காரலைனா நீதிமன்றம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ப்ளாக் வாட்டரின் தலைமையகத்தில் நடந்த சோதனையில் 17 ஏ.கே-47 துப்பாக்கிகள் உள்ளிட்ட 22 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதன்பேரில் ப்ளாக் வாட்டரின் தலைவர் உட்பட ப்ளாக்வாட்டரின் வழக்கறிஞர் ஆண்ட்ரூ நோவல், எக்ஸ்க்யூட்டிவ் வைஸ் ப்ரசிடண்ட் பில் மாத்யூஸ், ஆயுத சேகரிப்பின் பொறுப்பில் உள்ள அனபண்டி, ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்பிலிலுள்ள ரொனால்ட் ஸ்லீசக் ஆகியவர்களுக்கெதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜாக்ஸன் கடந்த ஆண்டுதான் ப்ளாக் வாட்டரின் தலைவர் பதவியிலிருந்து மாறினார். 2007 ஆம் ஆண்டு பாக்தாதில் அப்பாவி ஈராக்கிய மக்களை கூட்டுக் கொலைச் செய்ததற்காக சட்ட நடவடிக்கையை சந்தித்த ப்ளாக் வாட்டர் தனது பெயரை சீ சர்வீஸ் என பெயர் மாற்றியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆயுதம் பதுக்கல்:ப்ளாக் வாட்டர் முன்னாள் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை"
கருத்துரையிடுக