காஸ்ஸா:காஸ்ஸா மற்றும் மேற்குகரையில் வாழும் ஃபலஸ்தீன் மக்கள் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சிறைக்கைதிகள் நினைவு தினத்தையொட்டி இஸ்ரேலிய வெஞ்சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் மக்களை விடுதலைச் செய்வதற்காக பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்.இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக்கை கிண்டல் செய்யும் விதமாக அவர்களுக்கெதிரான விசாரணை நாடகத்தை நடத்திக் காட்டினர்.
ஃபலஸ்தீன் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டேடிஸ்டிக்ஸ் அறிக்கையின்படி 7 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வாடுகின்றனர். இதில் 34 பெண் கைதிகளும், 270 குழந்தைகளும், 16 வயதுக்கு கீழ் உள்ள 44 பேரும் அடங்குவர்.
source:presstv

0 கருத்துகள்: on "சிறைக்கைதிகள் நினைவுதினம் ஃபலஸ்தீன் மக்கள் போராட்டம்"
கருத்துரையிடுக