17 ஏப்., 2010

மாவோயிஸ்டு விவகாரம்;அருந்ததி ராய்க்கெதிராக சட்டநடவடிக்கைக்க தயாராகிறது காவல்துறை

ராய்பூர்:மாவோவாதிகளுடனிருந்து அவர்களின் அனுபவத்தை கட்டுரையாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர் அருந்ததிராய்க்கெதிராக சத்தீஷ்கர் மாநில போலீஸ் சட்டநடவடிக்கைக்கு தயாராகிறது.

அருந்ததிக்கெதிராக சட்டநடவடிக்கைக்கு தயாராவதன் ஒரு பகுதியாக சட்டவல்லுநர்களிடம் கலந்தாலோசித்ததாக டி.ஜி.பி விஸ்வரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அருந்ததிராய் மற்றவர்களால் ஈர்க்கப்பட்டாரா அல்லது அவர் சிவில் சமூகத்தில் நடமாடும் உளவாளியா என்பதுக் குறித்து தனக்குத் தெரியாது என டி.ஜி.பி குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தில் ஒருவருக்கு விமர்சனம் செய்ய உரிமை உண்டு என்பதால் மாவோவாதிகளை ஆதரிப்பவர்களை சிறையில் அடைப்பதற்கு முன்பு மாவோவாதிகளுடனான உறவை நிரூபிக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.
'துப்பாக்கி ஏந்திய காந்தியவாதி' என்ற அருந்ததி எழுதிய கட்டுரைதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே அருந்ததி எழுதிய 'தோழர்களுடன்' என்ற கட்டுரைக்கெதிராக விஸ்வஜித் மித்ரா என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாவோயிஸ்டு விவகாரம்;அருந்ததி ராய்க்கெதிராக சட்டநடவடிக்கைக்க தயாராகிறது காவல்துறை"

கருத்துரையிடுக