10 ஏப்., 2010

17 வயது பெண்ணை தாலிபான்கள் சாட்டையால் அடிக்கும் வீடியோ போலி என்கிறார் அதன் தயாரிப்பாளர்

கடந்த 2009ஆம் ஆண்டு சுவாத் பகுதியைச் சார்ந்த 17 வயது பெண்ணை தாலிபான்கள் பொது இடத்தில் வைத்து சாட்டையால் அடிக்கும் காட்சியைக் கொண்ட வீடியோக்காட்சி போலியானது என அந்த வீடியோவை தயாரித்தவர் தெரிவித்துள்ளார்.

அவ்வீடியோவில் சுவாத் பகுதியைச் சார்ந்த 17 வயதுப்பெண் தனது ஆண் நண்பருடன் இருக்கும் காட்சியும் அவரை 3 நபர்கள் பிடித்துக் கொண்டு ஒருவர் சாட்டையால் 34 முறை அடிக்கும் காட்சி அடங்கியுள்ளது. அவ்வீடியோவில் இரு குழந்தைகளும் காணப்படுகின்றன.

இவ்வீடியோ வெளியிடப்பட்ட உடனேயே சுவாத் மாகாண அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுத்தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்க்கொண்டது. இவ்வீடியோவை இஸ்லாமாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனம் NGO ஒன்று தயாரித்துள்ளது தெரியவந்தது.

இந்த வீடியோவை தயாரித்த நிறுவனம் 5 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளது. அந்த வீடியோக் காட்சியில் நடிக்க 17 வயது பெண்ணிற்கு 1 லட்சம் ரூபாயும், குழந்தைகள் ஒவ்வொன்றிற்கும் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

போலி வீடியோக் குறித்து வெளியான செய்திகள் மூலம் பலகாலமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொடூரமாக சித்தரிக்கும் வகையிலான வீடியோக்கள் வெளிவந்ததும் இத்தகைய போலியாகத்தானிருக்கும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

போலி வீடியோவை தயாரித்த இஸ்லாமாபத்தைச் சார்ந்த அரசு சாரா நிறுவனத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
source:peacetimes. net
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "17 வயது பெண்ணை தாலிபான்கள் சாட்டையால் அடிக்கும் வீடியோ போலி என்கிறார் அதன் தயாரிப்பாளர்"

கருத்துரையிடுக