வாஷிங்டன்:ஈரானுக்கெதிராக தடை ஏற்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கு 6 வல்லரசு நாடுகளின் ஐ.நா பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை பயன் தரத்தக்க வகையில் அமைந்ததாகவும், வரும் நாட்களில் இதுத்தொடரும் எனவும் 6 நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈரானின் புரட்சிப்படையை குறிவைத்துதான் ஐ.நா தடைக்காக முயற்சியை மேற்க்கொண்டு வருகின்றன. ஆனால் சீனாவும், ரஷ்யாவும் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்வதற்கான தீர்மானத்தை தயாரிப்பதற்குத்தான் இந்நாடுகளின் தூதர்கள் நியூயார்க்கில் ஒன்று கூடியது. இக்கூட்டத்தில் சீனாவும், ரஷ்யாவும் கலந்துக் கொண்டன. இப்பேச்சுவார்த்தை தூதரக நடவடிக்கைத் தொடர்பானது மட்டுமே என்றும், இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றதால் ஈரான் மீது வலுவான தடை நடவடிக்கையை ஆதரிப்பதாக கருதவேண்டாம் எனவும் சீனா தூதர் தெரிவித்தார்.
அதேவேளையில் ரஷ்யா தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிவிட்டு அமெரிக்காவுடன் நெருங்குவதாகவும் கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈரானுக்கெதிராக தடை:விவாதிக்க 6 நாடுகளின் ஐ.நா தூதர்கள் சந்திப்பு"
கருத்துரையிடுக