வாஷிங்டன்:குவாண்டனாமோ சிறைக் கொட்டகையில் முதலில் அடைக்கப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிரபராதிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசுக்கு இதுத்தெரியும் என முன்னாள் அமெரிக்க அதிகாரி நீதிமன்றத்தில் அளித்த சத்திய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஈராக்கிற்கெதிராக போர் துவங்கியதை பாதிக்கும் என்பதால் ஜார்ஜ் W புஷ்ஷின் அரசு இவ்விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரிட்டனிலிருந்து வெளிவரும் ’டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமெரிக்க அரசு செயலர் காலின் பவுலின் சீஃப் ஆஃப் செகரட்டரியாக பணிபுரிந்த கர்னல் வில்கேர்ல்சன் தான் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை குவாண்டனாமோ சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டிருந்த சூடான் நாட்டைச் சார்ந்த ஹமத் தொடுத்த வழக்கில்தான் வில்கேர்ல்சன் சத்திய வாக்குமூலம் அளித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ்ஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகிய காலின் பவுலின் ஆதரவுடன் தான் வில்கேர்ல்சன் இதனை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதப்படுகிறது.
ஜார்ஜ் புஷ்ஷின் பயங்கரவாத வேட்டைக்கும் ஈராக் போருக்குமெதிராக வில்கேர்ல்சன் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "வாஷிங்டன்:குவாண்டனாமோ சிறைக்கொட்டகையில் முதலில் அடைக்கப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிரபராதிகள் என தகவல் வெளியாகியுள்ளது"
கருத்துரையிடுக