காபூல்:தென்கிழக்கு ஆப்கானில் ஸபூல் மாகாணத்தில் நேட்டோ ஆக்கிரமிப்பு படையினரின் ஹெலிகாப்டர் தகர்ந்து விழுந்ததில் 4 அமெரிக்க ராணுவவீரர்கள் பலியாயினர். இதில் பலபேருக்கு காயம் ஏற்பட்டது.
தொழில் நுட்ப தகராறுதான் விபத்திற்கு காரணம் என நேட்டோ கூறினாலும், தாங்கள் தான் ஹெலிகாப்டரை வீழ்த்தியதாக தாலிபான் போராளிகள் கூறுகின்றனர்.
ஹெலிகாப்டர் வீழ்த்தப்படுவது ஸாபூல் மாகாணத்தில் இது இரண்டாவது தடவையாகும். இவ்விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் என நேட்டோ கூறுகிறது. ஆனால் 25 பேர் மரணமடைந்துள்ளதாக தாலிபான் போராளிகள் கூறுகின்றனர்.
ஆப்கானில் அந்நிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு கடந்த 10 வருடங்களில் கடும் இழப்புகளை ஏற்படுத்திய வருடம் 2010 ஆகும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் கொடூரத்தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியாவதும் அதிகரித்துள்ளது.
இதற்கெதிராக சமீபத்தில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயியும், பழங்குடியின தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கான்:நேட்டோ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 அமெரிக்கப்படையினர் பலி"
கருத்துரையிடுக