புதுடெல்லி:சட்டீஷ்கர் மாநிலம் தண்டே வாடாவில் இரண்டு தினங்களுக்கு முன்பு சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மீது நடந்த தாக்குதலை நடத்தியவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என அத்தாக்குதலில் காயமடைந்து உயிர்தப்பிய சி.ஆர்.பி.எஃப் படை வீரர் கூறியுள்ளார்.
கடுமையாக காயமுற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிட்சையிலிருக்கும் சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் ஆதித்யாசிங்(வயது 21) என்பவர்தான் இதனை தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று உறுதிச்செய்த பின்னரே மாவோயிஸ்டுகள் திரும்பிச் சென்றனர்.
அப்பொழுது ஆதித்யாசிங் தான் இறந்தது போல் நடித்துள்ளார். மேலும் ஆதித்யா சிங் கூறியதாவது: "நவீன ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் வைத்திருந்தனர். மோதல் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. மாவோயிஸ்டுகள் எல்லா இடத்திலும் வெடிக்குண்டுகள் வைத்திருந்தனர். தாக்குதல் நடந்தபொழுது நாங்கள் திருப்பித் தாக்கினோம். நான் மட்டும் 120 குண்டுகளை சுட்டேன். அவர்களில் சிலர் குண்டடிப்பட்டு கீழே விழுந்தனர். துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்தவுடன் வேறொரு இடத்திற்கு மாறினோம். அங்கே மாவோயிஸ்டுகள் வெடிக்குண்டு வைத்திருந்ததால் அது வெடித்து பல சி.ஆர்.பி.எஃப் ஜவான்களும் கொல்லப்பட்டனர். வெடிக்குண்டு வெடித்ததைத் தொடர்ந்து நான் நினைவிழந்தேன்.
மாவோயிஸ்டுகள் எனக்கு அருகில் வருவதை நான் அரை மயக்கத்தில் கண்டேன். அவர்களில் பெண்கள் அதிகமிருந்தனர். நான் இறந்துவிட்டேனா என்பதை உறுதிச்செய்ய என்னை உதைத்துப் பார்த்தார்கள். அப்பொழுது நான் உணர்வில்லாதவன் போல் கிடந்தேன். நான் இறந்துவிட்டேன் எனக்கருதி அவர்கள் என்னை விட்டுச்சென்றனர். நான் என்னுடைய சக படைவீரர்களின் உடல்களுக்கு மத்தியில் கிடந்தேன்.
சுற்றுவட்டாரத்தில் மிகக்குறைவான ஆதிவாசிகளே உள்ளனர். அவர்களுக்கு எங்களுக்கு உதவ பயம். சி.ஆர்.பி.எஃப் உதவிக்காக வரும் வரை நான் இரத்தம் வெளியேறிக் கிடந்தேன்." இவ்வாறு ஆதித்யா தெரிவித்தார்.
ஆதித்யா சிங்கிற்கு நிறைய குண்டுகள் தாக்கியுள்ளன. அவருடைய இடது கண்ணின் பார்வை நஷ்டமடைந்துள்ளது. ஆதித்யா இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
2 கருத்துகள்: on "சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்களில் பெரும்பாலோர் பெண்கள்- தாக்குதலில் தப்பித்த படை வீரர்"
இந்திய அரசு நடத்தும் பயங்கரவாதத்திற்கு சரியான தண்டனை. இந்த இதயம் அழுகிய காவல் துறை கயவர்கள் முஸ்லிம்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயகரவாத தாக்குதல்களுக்கு முஸ்லிம்களால் பதில் சொல்ல தென்பும் திராணியும் இல்லாது இந்த நீதிமன்ற கயவர்களை நாடி நீதியும் கிடைக்காமல் எத்தனை முஸ்லிம் மக்களும் தாழ்த்த பட்ட மக்களும் அலை கழிக்க பட்டார்கள். அவர்களது பிரார்த்தனைக்கு கிடைத்த பலன். முஸ்லிம் தலைவர்கள் போலி ஜனநாயகம் போசி முஸ்லிம்களை பாதுகாக்கிறோம் என்று நேரத்தை வீண் செய்யாமல் ஒரு ஆயூத போராட்டத்தை நோக்கி போனால் தான் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும். சிந்திப்பார்களா?
இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி கருவறுக்க பார்கிறார்கள். இந்தியாவில் மத சார்பின்மை என்பது ஏட்டளவில் தான் உள்ளது. இதனால் இந்த ஒட்டு பொருக்கி அரசியல் வாதிகளை நம்பாமல். சீக்கிரமாக ஒரு ஆயூத போராட்டத்திற்கு தயாராகுங்கள். இலையேல் எதிர் காலத்தில் இந்தியாவில் முஸ்லிம் என்றொரு சமுகம் இருந்ததா என்று கேட்க்க வேண்டி வரும்.
கருத்துரையிடுக