மும்பை:மும்பையில்கடந்த 2008ம் ஆண்டு நவம்பர்26ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிய அஜ்மல் கசாப் மீதான வழக்கில் மே 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தில் நீதிபதி தஹிளியானி முன்னிலையில் இந்த வழக்கு இத்தனை காலமாக விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை சமீபத்தில் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட்து. இந்த நிலையில் மே 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பில் கசாப்புக்கு என்ன தண்டனை அளிக்கப்படப் போகிறது என்பதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
தீர்ப்புக்குப் பின்னர் மும்பைத் தாக்குதலின்போது பயன்படுத்திய 24 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களை பாதுகாப்பை முறையில் நீதிபதி முன்பு வெடிக்கச் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துகள்: on "கசாப் மீதான வழக்கில் மே 3ம் தேதி தீர்ப்பு"
கருத்துரையிடுக