1 மே, 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு: 2 ஹிந்து தீவிரவாதி கைது

அஜ்மீர்:அஜ்மீரில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டு 15 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் இருப்பது விசாரணையில் தெளிவானது.

இதுத்தொடர்பாக தேவேந்திர குப்தா என்பவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார்(ATS) அஜ்மீர் பிஹாரிகன்ச் என்ற பகுதியிலிருந்து கைதுச் செய்தனர். இதுத்தொடர்பாக போலீஸ் கூறுகையில், குப்தாவுக்கு அபினவ் பாரத்துடனும் மலேகான் குண்டுவெடிப்பில் கைதுச்செய்யப்பட்ட ஹிந்து தீவிரவாதி சன்னியாசி பிரக்யாசிங் தாக்கூருடனும் தொடர்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘சிம்’ கார்டு குப்தாவை கண்டுபிடிக்க உதவியதாகவும் போலீசார் தெரிவித்தனர். NDTV தெரிவிக்கையில், குப்தாவை ஏ.டி.எஸ் தொடர்ந்து 6 மாதமாக கண்காணித்து வந்ததாக தெரிவிக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த குப்தா நோய்வாய்ப்பட்ட தன் தாயாரை பார்க்க புதன்கிழமை அஜ்மீருக்கு வந்தார். அவது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த போலீசார் அவரைக் கைது செய்தனர். அவரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இவரிடம் நடத்திய விசாரணையி்ன் அடிப்படையில் இந்த குண்டுவெடிப்பில் இன்னொரு முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் பரோட் என்பவரும் நேற்றிரவு பிடிபட்டார். ராஜஸ்தான் மாநிலம் சாஜாபூர் அருகே ஒரு கிராமத்தில் வைத்து இவரை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.
இந்த இருவருக்கும் மராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான பெண் தீவிரவாதி பிரஞ்யா சிங் தாக்குருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்துள்ளார்.

செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு: 2 ஹிந்து தீவிரவாதி கைது"

கருத்துரையிடுக