30 ஏப்., 2010

ஃபலஸ்தீன் சுரங்கத்தின் மீது தாக்குதல்: 4 ஃபலஸ்தீனர்கள் படுகொலை

காஸ்ஸா:காஸ்ஸாவில் நடைபெற்ற இரண்டுத் தாக்குதல்களில் 5 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். சுரங்கத்தின் மீது எகிப்திய படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேரும், போராட்டக்காரர் மீது இஸ்ரேல் சியோனிஷ படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

காஸ்ஸா மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியுலகத்தை தொடர்புக் கொள்ளும் சினாய் பாலைவனத்திலிலுள்ள சுரங்கத்தின் மீதுதான் எகிப்திய படையினர் தாக்குதல் நடத்தினர். ஆயுதம் சேகரிக்க சுரங்கத்தை பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி இந்த கொடூரத்தை எகிப்திய படையினர் நிகழ்த்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் ரஃபா எல்லையில் நான்கு சுரங்கங்களை தகர்த்ததாக எகிப்து ஒப்புக்கொண்டது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து ஃபலஸ்தீன் போராளிகளுக்கு ஆயுதங்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டி சுரங்கங்களை தகர்த்துள்ளது எகிப்து.

அதே வேளையில், சுரங்கத்தில் விஷவாயுவை செலுத்தியதால்தான் 3 ஃபலஸ்தீனர்கள் மரணமடைந்தனர் என ஃபலஸ்தீன் போலீஸ் கூறுகிறது. சுரங்கங்களின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 4-வது நபர் மரணமடைந்துள்ளார். மரணித்தவர்கள் சுரங்கப்பணியாளர்கள் என உள்துறை அமைச்சகம் உறுதிச்செய்துள்ளது. இச்சம்பவத்தை கண்டித்த ஹமாஸ் எகிப்திய அரசு இதுக்குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனக்கோரியுள்ளது.

இஸ்ரேலுக்கும், கிழக்கு காஸ்ஸாவிற்குமிடையே நிர்மாணிக்கும் பாதுகாப்பு பகுதிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஃபலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இஸ்ரேலிய சியோனிஷ ராணுவத்தின் அநியாய தாக்குதலில் 19 வயதான முத்துவியா ஹுசைன் மரணமடைந்தார்.

வேலிக்கு பின்னாலிருந்து இஸ்ரேலிய சியோனிஷ ராணுவத்தினர் காரணமில்லாமல் சுட்டதாக ஆரோக்கிய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் குறைவான ஆட்களே கலந்துக்கொண்டனர் என்றும், எந்தவிதமான தூண்டலும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைக் குறித்து விசாரிக்க இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளதாம்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் சுரங்கத்தின் மீது தாக்குதல்: 4 ஃபலஸ்தீனர்கள் படுகொலை"

கருத்துரையிடுக