30 ஏப்., 2010

உளவு:முக்கிய விபரங்கள் உளவறியப்படவில்லை என மத்திய அரசு- ’ரா’, ‘ஐ.பி’ அதிகாரிகளை தப்பவைக்கும் முயற்சியா?

புதுடெல்லி:பெண் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா நடத்திய உளவுப்பணியில் முக்கிய விபரங்கள் உளவறியப்படவில்லை என மத்திய அரசு கூறுகிறது. அதேவேளையில் விசாரணை நிறைவடையாமல் இதன் முழுவிபரத்தையும் வெளிப்படுத்த இயலாது எனவும் அரசு கூறுகிறது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயிடம் மாதுரி குப்தா தகவல்களை அளித்ததாக மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ப்ரனீத் கவுர் மக்களவையில் ஒப்புக்கொண்டார். ஆனால் முக்கியமான ஆவணங்களை பாதுகாத்த இடத்தில் பிரவேசிக்க மாதுரிக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேசப்பாதுகாப்புத்தொடர்பான விவகாரமானதால் முக்கிய விபரங்களை அளிப்பது விசாரணையை பாதிக்கும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,"மத்திய அரசு இச்சம்பவத்தை மிகவும் அக்கறையுடன் கவனிக்கிறது. மாதுரியை போலீஸ் விசாரணைச் செய்துவருகிறது" என்றார்.

உளவுவேலையின் எல்லா பகுதிகளைக் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தெரிவித்தார்.

இதற்கிடையே மாதுரி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவிருந்தார் என சில விஷமிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சிலகாலமாக மாதுரி இஸ்லாமிய கொள்கையோடு விருப்பமும், நெருக்கமும் காண்பித்தார் எனவும், லக்னோவில் வசித்தபொழுது ஒரு ஷியா குடும்பத்திடம் கொண்ட நெருங்கிய நட்பு இஸ்லாத்தை ஈர்க்க காரணமென்றும் இவர்கள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இத்தகவலை அவருடைய சக ஊழியர்களோ, குடும்பத்தினரோ ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் ’ரா’ அதிகாரிகளில் சிலர் உளவு வேலையில் ஈடுபட்டது தெரியவந்த பிறகும் அவர்களை கைதுச்செய்ய காலதாமதம் செய்வது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

முக்கியமான தகவல்கள் உளவறியப்படவில்லை என்று மத்திய அரசு கூறினாலும், ராணுவ ரகசியங்கள் ‘ரா’ அதிகாரிகள் மூலம் அளிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ’ரா’ அதிகாரிகளின் உதவியில்லாமல் மாதுரி உளவறிந்திருக்க வாய்ப்பில்லை. மாதுரி ஏற்கனவே தொடர்பிலிருந்த ‘ரா’ அதிகாரிகளின் போன் நம்பர்கள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.

ஜம்மு-கஷ்மீரில் ஒரு டாக்டர் தம்பதியினர் கைதுச் செய்யப்பட்டதும் இதன் ஒரு பகுதியாகும்.மாதுரியின் வங்கிக் கணக்குகள் பரிசோதனைச் செய்யப்பட்டு வருகின்றன.மாதுரிக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வங்கிக் கணக்குகள் உள்ளன. இவைதான் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

கோலாலம்பூர், பாக்தாத் ஆகிய இடங்களில் முன்பு மாதுரி பணியாற்றி வந்தார். அதுக்குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான ‘ரா’ அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உளவு:முக்கிய விபரங்கள் உளவறியப்படவில்லை என மத்திய அரசு- ’ரா’, ‘ஐ.பி’ அதிகாரிகளை தப்பவைக்கும் முயற்சியா?"

கருத்துரையிடுக