2 ஏப்., 2010

ஹைதராபாத்:அத்தியாவசிப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் தவிப்பு 5 நாட்களாக தொடரும் ஊரடங்கு

ஹைதராபாத் நகரில் ஐந்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்கள் கடும் பற்றாக் குறையாகியுள்ளது. இதனால் ஹைதராபாத் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பழைய ஹைதராபாத் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை கலவரம் மூண்டது. இது நகரின் பல பகுதிகளுக்கும் பரவியதால் அன்று மாலை முதல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. விலையும் 20 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அரிசி, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர். நேற்று காலை 2 மணி நேரம் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அந்த சமயத்தில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்த்தால் கடைகளில் பெரும் நெரிசல் காணப்பட்டது.

இதற்கிடையே, இன்று மாலை காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. தற்போது நகரில் வன்முறை குறைந்திருப்பதால், ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைதராபாத்:அத்தியாவசிப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் தவிப்பு 5 நாட்களாக தொடரும் ஊரடங்கு"

கருத்துரையிடுக