வாஷிங்டன்:ஈரானுடன் எரிவாயு பைப்லைன் ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தானை கடுமையாக அமெரிக்கா விமர்சித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் வரை எந்தவொரு நாடும் ஈரானுடன் தொடர்புவைக்கக் கூடாது என தெற்கு-மத்திய ஆசியாவின் பொறுப்பு வகிக்கும் அமெரிக்காவின் துணைச்செயலாளர் ராபர்ட் ப்ளேக் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் சந்தேகம் நிலவுவதால் இச்சூழலில் அந்நாட்டுடன் எரிவாயு பைப்லைன் திட்டத்தில் பங்குசேர்வது சரியில்லை என அவர் தெரிவித்தார். எரிவாயு தேவைக்கு பாகிஸ்தான் வேறு வழிகளை தேடவேண்டும் என அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் பாகிஸ்தான் ஈரானுடன் எரிவாயு பைப்லைன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 7.5 லட்சம் டாலர் செலவாகும் இத்திட்டத்தில் இந்தியாவும் ஏற்கனவே தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது. ஈரானுடன் எரிவாயு பைப்லைன் திட்டத்தில் பங்கு சேர்வதற்கான பேச்சுவார்த்தைத் தொடர்வதாக இந்தியாவின் பெட்ரோலியத்துறை செயலாளர் எஸ்.சுந்தரேசன் நியூயார்க்கில் தெரிவித்திருந்தார். சர்வதேச செறிவூட்டல் பேரவையில் பங்கேற்பதற்காக அமைச்சர் முரளி தேவருடன் அவர் நியூயார்க் வந்துள்ளார்.
நியாயமான விலையில் எல்லையிலிருந்து எரிவாயு கிடைத்தால் இத்திட்டத்தில் பங்குசேர தாங்கள் விரும்புவதாகவும் இதுத் தொடர்பாக எழும் அரசியல் பிரச்சனைகளை தாங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈரானுடன் உறவு வேண்டாம்- இந்தியா பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை"
கருத்துரையிடுக