ஜித்தா:சவூதி அரேபியாவில் பிஷா, அஸீர் மாகாணங்களில் கடந்த நான்கு தினங்களாக பெய்துவரும் கனத்த மழையால் ஏற்பட்ட விபத்தில் 50 பேர் மரணமடைந்தனர். 395 பேருக்கு காயம் ஏற்பட்டது. சிவில் டிஃபன்ஸ் 250 பேரை உயிரோடு மீட்டுள்ளது. வீடுகளை இழந்த 145 பேருக்கு சிவில் டிஃபன்ஸ் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். யெமன் நாட்டையொட்டிய பிரதேசத்தில்தான் மழைப்பெய்தது.
கிராமங்களையும், அரசு அலுவலகங்களையும் இணைக்கும் ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சவூதி மின்சாரத்துறை ஊழியர்கள் மின்சாரத் தொடர்பை ஏற்படுத்துவதற்காக 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
4596 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜித்தாவில் கனமழையால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் மரணமடைந்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சவூதியில் கனமழை:50 பேர் மரணம்"
கருத்துரையிடுக