ராய்பூர்:சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 73 சி.ஆர்.பி.எஃப் படையினர் கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்கரில் தண்டேவாடே மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் சி.ஆர்.பி.எஃப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 6 மணிக்கு வந்துக்கொண்டிருந்த சி.ஆர்.பி.எஃப்ன் 73 படை வீரர்கள் மீது 300 பேரைக் கொண்ட மாவோயிஸ்டுகள் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
படைவீரர்கள் மீது வெடிக்குண்டை வீசியெறிந்த பிறகு நாலாப்புறத்திலிருந்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். 11.30 மணிக்கு இத்தாக்குதல் முடிவடைந்தது.
இதுகுறித்து மாநில டிஜிபி விஸ்வரஞ்சன் கூறுகையில், பலியானவர்களின் உடல்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஐஜி.ஆர்.கே.விஜ் கூறுகையில், "தாக்குதல் நடந்த பகுதிகளில் இருந்து இதுவரை 73 சிஆர்பிஎப் வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.
0 கருத்துகள்: on "சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 73 சி.ஆர்.பி.எஃப் படையினர் கொல்லப்பட்டனர்"
கருத்துரையிடுக