9 ஏப்., 2010

ஷார்ஜாவில் தீவிபத்து:3 நிறுவனங்கள் எரிந்து நாசம்

ஷார்ஜா:ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநிலமான ஷார்ஜாவில் நேற்று(8/04/10) மாலை 3 மணியளவில் தொழில் பேட்டை எண்.6 இல் ஏற்பட்ட கடும் தீவிபத்தில் 3 நிறுவனங்கள் எரிந்து நாசமடைந்தன.எவருக்கும் அபாயமில்லை எனினும் பத்துலட்சம் திர்ஹமிற்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக ஷார்ஜா சிவில் டிஃபன்ஸ் தலைவர் கர்னல் வஹீத் அல் ஸர்க்கல் தெரிவித்தார்.

டைல்ஸ் தயாரிக்கும் ஜெர்மனி ஹோம் நிறுவனத்திலிருந்துதான் முதலில் தீப்பற்றியது. இத்தீ சமீபத்திலிருந்த ராஹல் ஆட்டோ பழுதுபார்க்கும் நிறுவனம், டெல்டா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களுக்கும் பரவியதால் அவை தீயில் எரிந்து நாசமடைந்தன. அருகில் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களும் எரிந்து சாம்பலாகின.
ஷார்ஜா, அஜ்மான் ஆகிய இடங்களிலுள்ள சிவில் டிஃபன்ஸ் அதிகாரிகள் 3 மணிநேரம் கடின முயற்சிச் செய்து தீயை அணைத்தனர். தீ ஏற்பட்டதற்கான காரணத்தை போலீஸ் விசாரித்து வருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷார்ஜாவில் தீவிபத்து:3 நிறுவனங்கள் எரிந்து நாசம்"

கருத்துரையிடுக