திருவனந்தபுரம்:இந்திய நாட்டில் சர்வதேச கருத்தரங்குகளிலும் இதர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக இஸ்லாமிய நாடுகளிலிருந்தோ அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலிருந்தோ வருகைத்தரும் பிரநிதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டில் சர்வதேச கருத்தரங்குகள், மாநாடுகள், பணிமனைகள்(workshop), ஆகியவற்றை ஏற்பாடுச் செய்யும்பொழுது பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக பேணவேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், ஈராக், பாகிஸ்தான், சூடான், பாகிஸ்தானைச் சார்ந்த வெளிநாடுகளில் வசிப்போர், சீனா, இலங்கை, எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லாதவர்கள் ஆகியோருக்கு மாநாடுகளில் பங்கேற்க விசா கிடைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஃபாரினர்ஸ் க்ளியரிங்கில் பாதுகாப்பு க்ளியரன்ஸ் பெற்றிருக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்க உள்ளிட்ட இதர நாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் இந்திய மிஷன்களிலுருந்து கான்ஃப்ரன்ஸ் விசாவுக்கு மனுச்செய்து பெறலாம்.
இஸ்லாமிய நாடுகளிலிருந்து பங்கேற்போருக்கு விசா கிடைக்க வேண்டுமெனில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் அழைப்புக் கடிதம், உள்துறை அமைச்சகத்தின் ஈவண்ட் க்ளியரன்ஸ், தொடர்புடைய அமைச்சகத்தின் அனுமதி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் க்ளியரன்ஸ், நிகழ்ச்சி நடக்கும் மாநிலத்தின் க்ளியரன்ஸ் ஆகியவற்றை ஆஜர்படுத்த வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிரிவுதான் சர்வதேச மாநாடுகளுக்கும், கருத்தரங்குகளுக்கும் அனுமதி வழங்குகிறது. சர்வதேச கருத்தரங்குகள் துவங்குவதற்கு ஆறுவாரத்திற்கு முன்பு குறிப்பிட்ட மனுத்தாளில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெளிநாட்டவரைக் குறித்த தெளிவான விபரங்களை குறிப்பிட்டு சமர்ப்பிக்காவிட்டால் மனு நிராகரிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இஸ்லாமிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருகை தருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு"
கருத்துரையிடுக