வாஷிங்டன்:கடந்த ஆண்டு ஜூன் மாதம் காணாமல் போன ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி அமெரிக்காவில் இருப்பதாக ஏ.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அணுசக்தி விஞ்ஞானியான ஷாரம் அமீரி அமெரிக்காவில் வசிப்பதாகவும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தடுப்பதற்கு சி.ஐ.ஏவுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
கடந்த ஆண்டு ஹஜ்ஜின்போது சவூதி அரேபியாவில் மக்காவிலிருந்து ஷாரம் அமீரி காணாமல் போனார். அமீரியை அமெரிக்கா கடத்திச் சென்றுவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் தங்களுக்கு இதைக் குறித்து விபரம் ஒன்றும் தெரியாது என அமெரிக்கா மறுத்திருந்தது.
ஏ.பி.சி நியூஸ் வெளியிட்ட செய்தியைக் குறித்து சி.ஐ.ஏ பதிலளிக்கவில்லை. டெஹ்ரானில் மாலிக் அஸ்தர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தார் அமீரி.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காணாமல் போன ஈரான் விஞ்ஞானி அமெரிக்காவில்"
கருத்துரையிடுக