புதுடெல்லி:முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள பிரிவினரை இடஒதுக்கீடு பட்டியலில் இடம்பெறச் செய்வதில் அரசு உறுதுப்பூண்டுள்ளது என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
சச்சார் கமிஷன் இதுக்குறித்து சிபாரிசுச் செய்துள்ளது, மேலும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்களித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற மாநில சிறுபான்மை கமிஷன்களின் கூட்டத்தில் பங்கேற்ற சல்மான் குர்ஷித் பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்தார். மேலும்,"முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் இணைத்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடத்திய சோதனை வெற்றிகரமானதின் அடிப்படையில் மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும்.
பீஹார் மாநிலத்திலும் இதுத்தொடர்பான நடவடிக்கைகளுக்கு துவக்கம் குறிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை இரண்டு முறை தடைச்செய்த ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றம் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுச் செய்யவேண்டும் என்பதை மறுக்கவில்லை.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆந்திர உயர்நீதிமன்றம் விஞ்ஞானப்பூர்வமற்ற அரைகுறையான சர்வேயை இடஒதுக்கீட்டுக்கு அரசு அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றுக் கூறித்தான் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை தள்ளுபடிச் செய்தது. அதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்றம் அரசின் முயற்சியை ஏற்றுக் கொண்டுள்ளது.
அட்டவணைப் படுத்தப்படுத்த ஜாதியினருக்கு செய்த மாதிரியில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய வளர்ச்சிக்காக இடஒதுக்கீடு அல்லாத வழிகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். சமவாய்ப்புகள் வழங்குவதுக் குறித்த கமிஷன் உருவாக்குவதை உறுதியாக வரவேற்கிறேன்.
சிறுபான்மையினருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சம வாய்ப்புகளை உருவாக்க இது அத்தியாவசியமாகும். மாநில அரசுகள்தான் சிறுபான்மையினரை தீர்மானிக்க வேண்டும்.
ஐந்துபிரிவினரை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் அதிகமாக செய்ய இயலாது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் 77 சிபாரிசுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பொதுவான கருத்து உருவாக்கப்படும் வரை ஒன்றும் செய்ய இயலாது. சிறுபான்மை கமிஷன்கள் இல்லாத கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் அம்மாநிலங்களின் முதல்வர்களுடன் நேரிடையாக பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்." இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்- சல்மான் குர்ஷித்"
கருத்துரையிடுக