பாரிஸ்:பொது இடங்களில் பர்தா அணிவதைத் தடுப்பதற்கான சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதம் என பிரான்சில் பிரபல நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோசியின் தலைமையிலான வலதுசாரிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற உள்கட்டமைப்புத் தேர்தலில் பலத்த அடிவாங்கியது சர்கோசியின் வலதுசாரி கட்சி. இதனைத் தொடர்ந்து வலதுசாரி வாக்குகளை மீட்டெடுப்பதற்காக பர்தா அணிவதைத் தடுப்பதற்கான சட்டத்தை அமுல்படுத்துவதில் மும்முரமாக இறங்கியது பிரான்சு அரசு.
அரசின் இந்த முயற்சிக்கெதிராக ஏராளமான மனித உரிமை அமைப்புகளும், முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தின. பர்தா அணிவதைத் தடைச்செய்வது அரசியல் சட்டத்திற்கும், ஐரோப்பிய கன்வென்ஷன் படி ஒருவருடைய மத சுதந்திரத்திற்கும் எதிரானதாகும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பர்தாவை தடைச்செய்யும் பிரான்சு அரசின் முயற்சிக்கு நீதிமன்றம் தடை"
கருத்துரையிடுக