ஜம்மு:ஜம்மு கஷ்மீரில் இளம்பெண்ணை கடத்திச் சென்ற ராணுவ வீரன் ஒருவனை போலீஸ் கைதுச்செய்தது.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ராணுவ வீரனின் தாயார் விஷம் குடித்து தற்கொலைச் செய்துக் கொண்டார்.
டெரிட்டோரியல் ஆர்மியில் பணிபுரியும் சக்தி சர்மா என்பவர் அஸ்ரா ஹாத்தூன் என்ற பெண்ணை வீட்டிலிருந்து கடத்திச் சென்றான். பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் என்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. விடுமுறையிலிருந்த ராணுவவீரன் பெண்ணைக் கடத்திச் சென்று ஸ்ரீநகருக்கு கொண்டுச் செல்லும் வழியில் போலீஸார் தகவல் அறிந்து வந்து மீட்டனர்.
மகனை கைது செய்ததை அறிந்த சக்தி சர்மாவின் தாயார் ரிதா தேவி விஷம் குடித்து தற்கொலைச் செய்துக்கொண்டார். தாயாரின் மரணச் சடங்குகளுக்காக போலீஸ் அவரை விடுதலைச் செய்து பின்னர் மீண்டும் கைது செய்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீர்:இளம்பெண்ணை கடத்திச் சென்ற ராணுவ வீரர் கைது; தகவல் அறிந்து தாயார் தற்கொலை"
கருத்துரையிடுக