ஸலாலா:கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யெமன் நீதிமன்றம் ஒன்று 27 வயதான பஸ்ஸாம் அப்துல்லாஹ் அல் ஹைதரி என்பவருக்கு இஸ்ரேலுக்காக உளவுவேலை பார்த்ததாகக் கூறி மரணத்தண்டனை விதித்திருந்தது.
இத்தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அல் ஹைதரிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த மரணத்தண்டனையை உறுதிச்செய்தது.
பஸ்ஸாம் அல் ஹைதரி முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹூத் ஓல்மர்ட்டுக்கு தான் மொஸாதிற்காக உளவு வேலைப்பார்க்க விரும்புவதாகக் கூறி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து பஸ்ஸாமின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கான பதில் கிடைத்தது.
இஸ்ரேலுக்கு உளவுவேலை பார்த்ததாக மொத்தம் 6 பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர். அதில் 3 பேர் மீது குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.
பஸ்ஸாமைத் தவிர மீதமிருவரில் இமாத் அலி அல் ரயீமிக்கு 3 வருடத் தண்டனையும், அலி அப்துல்லாஹ் அல்மஹ்ஃபாலுக்கு 3 முதல் 5 ஆண்டுவரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் இஸ்லாமிக் ஜிஹாத் ஆஃப் யெமன் என்ற போலிப் பெயரில் செயல்படுவதாகக் கூறி முன்னர் யெமனில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகக் கூறியது. அத்தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். அதில் தாக்குதல் நடத்திய 6 பேரும் அடங்கும்.
source:presstv
0 கருத்துகள்: on "யெமன்:இஸ்ரேலிய உளவாளிக்கு மரணத்தண்டனையை நீதிமன்றம் உறுதிச்செய்தது"
கருத்துரையிடுக