வாஷிங்டன்:சில தினங்களுக்கு முன்பு விக்கி லீக் என்ற இணையதளம் கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் இரண்டு செய்தியாளர்கள், குழந்தைகள் உள்ளிட்ட 12 ஈராக் மக்களை பாக்தாதின் தெருவில் கொடூரமாக குண்டுவீசி, சுட்டுக்கொன்ற வீடியோ காட்சியை வெளியிட்டது உலகமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அமெரிக்காவின் பயங்கவாத முகத்துக்கு மேலும் ஒரு ஆதாரமாக திகழ்ந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் இது குறித்துக் கூறியதாவது: "ஈராக்கில் சிவிலியன்களை கொலைச் செய்தது துக்ககரமானது. சிவிலியன்கள் கொல்லப்படுவதை பெரும்பாலும் தவிக்க வேண்டிய ராணுவத்தினர் கொன்றது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். இந்தக் குற்றத்தை புறக்கணிக்க முடியாது. இவ்வீடியோவை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டாரா என்பதுக் குறித்து தெரியாது என்றும், இச்சம்பவத்தைக் குறித்து விசாரிக்க பெண்டகனுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கிப்ஸ் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்க ராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு பலியானவர்களின் குடும்பத்தினர் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் விமானியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அத்தாக்குதலில் காயமடைந்த ஸஜாத் முதாஷர் தெரிவித்தார். அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஸஈத் சமாகின் குடும்பத்தினரும் சட்டநடவடிக்கைக்கு தயாராகி வருகின்றார்கள்.
விமானிக்கெதிராக கூட்டுப் படுகொலைக்கான வழக்கு பதிவுச் செய்ய வேண்டுமென்றும், நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் ஸஈதின் சகோதரர் ஸஃபா சமாக் கோருகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக் வீடியோ வருத்தத்திற்குரியது வெள்ளை மாளிகை. சட்டநடவடிக்கைக்கு தயாராகிறார்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்"
கருத்துரையிடுக