நியூயார்க்:1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற சீக்கியர்களுக்கெதிரான கலவரத்துடன் தொடர்புடைய வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் மத்திய அமைச்சர் கமல்நாத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் புகாரில் நீதிமன்றம் சுயமாக முடிவெடுக்குமென்றும் அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கலவரம் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள புகார் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறுகிறார், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள கமல்நாத்.
நீதிமன்றம் அனுப்பிய சம்மனை படித்தப் பிறகு தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சீக்கியர்களுக்கெதிரான கலவரத்தின் போது தனது குடும்பத்தில் 24 பேரை இழந்த ஜஸ்பீர்சிங், அவருடைய தந்தை மஹீந்தர்சிங் ஆகியோர்தான் இந்த அமைப்பின் சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சீக்கியர்களுக்கெதிரான கலவரம்: கமல்நாத்திற்கு அமெரிக்காவிலிருந்து சம்மன்"
கருத்துரையிடுக